top of page
Writer's pictureNatha Kishore

8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்

Updated: Sep 28, 2020

8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும் அனைத்து வயதினரும் எளிமையாக மேற்கொள்ளும் பயிற்சியாகவும் இந்த 8 வடிவ நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.


உடற்பயிற்சி செய்வதற்கு வெளியே செல்ல முடியாத சூழலில், நிறைய பேர் வீட்டுக்குள்ளேயே விதவிதமான உடற்பயிற்சிகளை செய்வதற்கு பழகி விட்டார்கள். மொட்டை மாடியிலோ, வீட்டின் முற்றத்திலோ 8 வடிவத்தில் கோடுகள் வரைந்து அந்த வட்டத்தை சுற்றி நடந்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும் அதிகரித்து இருக்கிறார்கள். அனைத்து வயதினரும் எளிமையாக மேற்கொள்ளும் பயிற்சியாகவும் இந்த 8 வடிவ நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.


நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு 6 அடி அகலம், 10 அடி நீளம் கொண்ட ‘8’ என்ற எண்ணை வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி வரைந்து கொள்ள வேண்டும். முதலில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நடக்க வேண்டும். பின்பு தெற்கில் இருந்து வடக்காக நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையிலும் தலா 15 நிமிடம் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது கவனமெல்லாம் 8 என்ற வடிவத்தில்தான் இருக்க வேண்டும். அதில் இருந்துவிலகி நடக்கக்கூடாது. ஒருவர் பின் ஒருவராக சீரான இடைவெளிவிட்டு நடக்க வேண்டும். அப்போது யாருடனும் பேசக்கூடாது. மீறி பேசுவது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும்.


8 வடிவ நடைப்பயிற்சி செய்வது பார்வை திறனை மேம்படுத்தும். வரையப்பட்டிருக்கும் கோடுகளை கூர்ந்து கவனித்தபடி செல்வதால், கருவிழிகள் அங்கும் இங்கும் சுழன்று, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பார்வை சார்ந்த பிரச்சினைகள் நீங்கும்.


இந்த பயிற்சியின்போது வெறும் காலில் நடப்பதால் பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் சீராக இருக்கும். உள்ளுறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு நோய் தாக்கத்தில் இருந்து விடுபட வைக்கும்.


நடைப்பயிற்சியை மேற்கொள்ளும்போது சுவாசமும் சீராக இருக்கும். மூக்கடைப்பு பிரச்சினைக்கு ஆளாகு பவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறலாம்.


சளி, இருமல் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கும் இந்த நடைப்பயிற்சி பலன் கொடுக்கும். நடக்கும்போது சுவாசிக்கும் திறன் மேம்படும். ஆக்சிஜன் அதிகமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரலில் தேங்கி இருக்கும் சளி வெளியேற ஆரம்பிக்கும். உடலின் ஆற்றலும் மேம்படும்.


தலைவலி, உடல் வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, பாத வெடிப்பு, செரிமான பிரச்சினை, தைராய்டு, உடல் பருமன், மலச்சிக்கல், தூக்கமின்மை, ஆஸ்துமா, முதுகுவலி, கழுத்துவலி, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு 8 வடிவ நடைப்பயிற்சி நிவாரணம் தேடித்தரும்.


நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த பயிற்சி நல்லது. காலையிலும், மாலையிலும் மேற்கொள்ளலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வழிவகுக்கும். இரத்த அழுத்தம் குறையும்.


8 வடிவ நடைப்பயிற்சியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மேற்கொள்வது நல்லது.


அறுவை சிகிச்சை செய்து இருந்தால் 6 மாதம் வரை இந்த பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது. அதன் பிறகு டாக்டரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்ளலாம். அதுபோல் இதயம் சார்ந்த பிரச்சினைகள், சர்க்கரை நோய், நரம்பு கோளாறுகள், பக்கவாதம், சிறுநீரகம் சார்ந்த பாதிப்புக்குள்ளானவர்கள் டாக்டரிடம் அனுமதி பெற்றே மேற்கொள்ள வேண்டும்.


தினமும் இந்த பயிற்சி செய்துவந்தால் பாதங்களும், கால்களும் வலுப்பெறும். சுவாசம் சார்ந்த கோளாறுகள் அனைத்தும் நீங்கும். காது கேட்கும் திறன் அதிகரிக்கும். முதுமையை தள்ளிப்போடவும் செய்துவிடும். இளமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்படலாம்.


18 views0 comments

Recent Posts

See All

PLANKS

FITNESS

Comments


Post: Blog2 Post
bottom of page