top of page
Writer's pictureNatha Kishore

பிராணயாமம் ஒரு யோகா

Updated: Sep 17, 2020

மூச்சு பயிற்சி அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும்.


பிராணயாமம்


பிராணன் என்பது உயிர்ச்சக்தி. பிராணன்+அயாமம் சேர்ந்தது பிராணயாமம் என்று அழைக்கப்படுகிறது. மனிதன் பிறக்கும் முதல் இறக்கும் காலம் வரை மூச்சுவிடுதலும் உடன் இருக்கும். மூச்சு பயிற்சி என்றழைக்கப்படும் பிரணாயாமத்தை முறை யாக கடைப்பிடித்தால் ஆயுள் நீடிக்கும் என்கிறார்கள் யோகக்கலை நிபுணர்கள்.


மூச்சு பயிற்சி


மூச்சு, சுவாசித்தல்

மனிதன் ஒரு நிமிடத்துக்கு 20 முறை குறையாமல் மூச்சை உள்ளிழுத்து அதே வேகத்தில் வெளியே விடுகிறான். ஆனால் மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளிவிட்டால் (நிமிடத்துக்கு 10 முறையாக) மனிதனின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


நாம் மூச்சுக்காற்றை சுவாசித்து உள் இழுக்கும் போது காற்று உடலில் நுரையீரலை அடைகிறது. வேகமாக மூச்சு இழுத்து அதே வேகத்தில் வெளிவிடும் போது நுரையீரலுக்கு போதுமான காற்று கிடைப்பதில்லை. அதே நேரம் ஆழ்ந்து மூச்சை இழுத்து மெதுவாக உள்ளிழுத்து அதே பொறுமையோடு வெளிவிடும் போது நுரையீரலுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்கிறது.இதனால் நுரையீரலின் செயல்பாடு சீராக இருப்பதோடு மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. மூளை அபார புத்திக்கூர்மையுடன் செயல்பட வைப்பதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. சீரான ஆக்ஸிஜன் தடையில்லாமல் பெறுவதால் உடலில் இருக்கும் உறுப்புகள் தூண்டப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது. முதுமையைத் தள்ளி இளமையாக வைத்திருப்பதோடு ஆயுளையும் ஆரோக்கியமாகவே அதிகரிக்கிறது.


அன்றாடம் நொடிப்போதும் விடாமல் மூச்சு விட்டு கொண்டிருந்தாலும் இந்த மூச்சு விடுதலையே ஒரு பயிற்சியாக்கி அதைச் செய்ய குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இவையும் உடற்பயிற்சியைச் சேர்ந்த ஒன்றே.

பொதுவாக காலை வேளையில் சுத்தமான ஆக்ஸிஜனை சுமந்துவரும் காற்றை ரசித்தப்படி உலா வருவது போல் அமைதியான இடத்தில் அமர்ந்து சுவாசித்து செய்யும் பயிற்சி உடலோடு மனதுக்கும் அலாதி சுகத்தைத் தரும். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த பிராணாயாமாவை செய்யலாம்.


"தனிப்பட்ட ஆற்றலை காஸ்மிக் ஆற்றலாக விரிவாக்குவது prāṇāyāma என்றழைக்கப்படுகிறது (prāṇa , ஆற்றல் + ayām , விரிவாக்கம்) - இராமமூர்த்தி மிஷ்ரா


பிராணயாமா செய்வதற்கு முன்பு


அதிகாலை வேளையில் செய்யும் பிராணாயாமம் பயிற்சியின் போது வெறும் வயிற்றில் செய்யாமல் குளிர்ந்த நீரை ஒரு டம்ளர் குடித்து பிறகு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.


தூய்மையான காற்றோட்டமுள்ள இடத்தில் (புல்தரை, திறந்த வெளி மைதானம் போன்ற இடங்கள் இருந்தால் இன்னும் சிறப்பு.) விரிப்பை போட்டு அதன் மீது பத்மாசனத்தில் அமர வேண்டும்.


பிராணயாமம் செய்யும் இடம் தூய்மையானதாக வசதியாக இருக்க வேண்டும். பயிற்சி செய்வதற்கு முன்பு நிமிர்ந்து உறுதியாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். பயிற்சி செய்பவர் உடலை வளைக்காமல் முதுகெலும்பு நேராக நிமிர்ந்திருக்கும்படி இருக்க வேண்டும். பேச்சு சத்தம் இல்லாத அமைதியான தனிமையான இடம் சிறந்ததாக இருக்கும்.


பிராணயாமா செய்முறை


இப்போது பிராணயாமம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பத்மாசனத்தில் அமர்ந்த பின்பு உங்கள் கவனம் முழுக்க முழுக்க உங்களது மூச்சுக்காற்று மீது மட்டுமே இருக்க வேண்டும். மூச்சுபயிற்சி பல்வேறு நிலைகளிலும் செய்யப்படுகிறது.


இடது மூக்கு துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து இடது மூக்குதுவாரத்தின் வழியாக வெளிவிடுவது இட கலை என்று சொல்வார்கள். வலது துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வலது மூக்கு துவாரத்தின் வழியே வெளியிடுவது பிங்கலை என்று சொல்வார்கள்.



இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து வலது மூக்குத்துவாரத்தின் வழியாக வெளியிடுவதும், வலது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து இடது மூக்குதுவாரத்தின் வழியாக வெளியிடுவதும் எளிய மூச்சு பயிற்சி என்று சொல்லலாம். இப்படி உள் இழுக்கும் போதும் வெளிவிடும்போது மற்ற துவாரத்தை மூடிகொள்ள வேண்டும். ஒரு துவாரம் வழியாக மட்டுமே மூச்சு விடுதலும், மூச்சு உள்ளிழுத்தலும் நடக்க வேண்டும்.


சுவாசத்தை உள்ளே மெதுவாக இழுப்பதை பூரகம் என்று சொல்வார்கள். உள்ளே இழுத்த காற்றை வெளியில் பொறுமையாக விடுவது ரேசகம் என்று சொல்வார்கள்.சுவாசத்தை நிறுத்தி வைப்பதை கும்பகம் என்றும் சொல்வார்கள்.வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல். இதை பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று கூறுவர். இதில் பிராண என்பது அதிமுக்கிய ஆற்றல் திறன் என்றும், அயாமா என்றால் கட்டுப்பாடு என்றும் பொருளாகும்.



பிராணயாமாவின் பயன்கள்


மூச்சை உள் இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் கவனத்தை மூச்சுப்பயிற்சியில் மட்டுமே வைத்தி ருக்க வேண்டும் என்பது மட்டும் தான் இந்த பயிற்சியின் அடிப்படை. தினமும் தொடர்ந்து செய்யும் போது ஒரே மாதத்தில் உடல் ஒழுங்கு நிலைக்கு வந்திருக்கும்.


எதிலும் அவசரம் அவசரம் என்று ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் எல்லாவற்றையும் குறிப்பாக சிக்கலான சூழலையும் பதட்டமில்லாமல் கையாள்வார்கள். நுரையீரலுக்கு காற்று தடையின்றி செல்வதால் சைனஸ், ஆஸ்துமா பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் அடைவார்கள்.



நீரிழிவு, மலச்சிக்கல், இரத்த அழுத்தம் பிரச்சனைகளை வராமல் காப்பதிலும்; வந்தவர்கள் செய்யும் போது கட்டுப்படுத்துவதிலும் இந்த பிராணயாம பயிற்சி உறுதுணையாக இருக்கும். உற்சாகம் குறைந்திருக்கும் போது எந்த நேரமாக இருந்தாலும் சோர்வை உடனே விரட்டியடிக்க மூச்சை மெதுவாக உள்ளிழுத்து நிறுத்தி பொறுமையாக வெளிவிடுங்கள். ஐந்துநிமிடங்களில் உற்சாகமாய் உணர்வீர்கள்.


அதிக தொப்பையைக் குறைக்க 15 நாட்களே போதுமானது...



உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சியைக் காட்டிலும் சிறந்தது யோகா என்கிறார்கள் நிபுணர்கள். உடல் தசைகளை அடக்கி ஆள யோகா துணைபுரிகிறது, உடலை வருத்தும் உடற்பயிற்சிகளுக்கு முன்னால் எளிமையான மூச்சுப்பயிற்சியால் செய்யும் இந்த பிராணயாமா பயிற்சி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்திருக்கும்.


உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை பரிசுத்தமாக்கி வைத்திருப்பதால் உடல் பொலிவுடன் இருக்கும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். செரிமானம் எளிதாகும். உணவின் தேவை கூடினாலும் உடல் எடை கட்டுக்கோப்புடன் இருப்பதை உறுதி செய்கிறது மூச்சுப்பயிற்சி என்னும் பிராணயாமா.


அனுபவமிக்க பயிற்சியாளரின் ஆலோசனையோடு மூச்சு பயிற்சியைத் தொடங்குங்கள். ஆயுளுக்கும் கட்டுக்கோப்பாய் அழகாய் ஜொலிப்பீர்கள்.


பயன்கள்


பிராணாயாமத்தை முறையாக செய்து வந்தால் ஏராளமான நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் வளமையடையும். ஊளைச்சதை கரைந்து விடும். தேவைக்கு அதிகமான கொழுப்புச் சத்துக் குறையும். கண்கள் பிரகாசமடையும். வயிற்றுக்கோளாறு, ஜீரணக் கோளாறு ஆகியவை மறைந்துவிடும். உடல் உறுப்புகள் திறம்பட வேலை செய்யும். சிந்திக்கும் திறன் பெருகும்.


21 views0 comments

Recent Posts

See All

PLANKS

FITNESS

Comments


Post: Blog2 Post
bottom of page